தேனியில் ரயில்வே மேம்பால பணிகள் விரைந்து முடிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தேனியில் ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியும் புரட்சிகர சோசிலிஸ்ட் கட்சியும் ஆர்ப்பாடம் நடத்தினர்.

Update: 2024-06-08 04:19 GMT

 இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியும் புரட்சிகர சோசிலிஸ்ட் கட்சியும் இணைந்து தேசிய நெடுஞ்சாலைத்துறை தேனி உதவிக்கோட்டப்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேனி- மதுரை சாலை ரயில்வே மேம்பாலம் பணிகள் நடைபெற்று வருகிறது. அதையொட்டி மதுரை சாலையில் சாலை தோண்டப்பட்டு குண்டு குழியுமாக உள்ளது. இந்த சாலையில் சிக்கிய மத்திய அரசு அதிகாரி ஒருவர் நேரடியாக கலெக்டர், எஸ்.பி., கவனத்திற்கு கொண்டு சென்று, பொதுமக்கள் படும் சிரமத்தை பதிவு செய்தார். அதன் பின்னரும் மாவட்ட நிர்வாகமும், போலீஸ் நிர்வாகமும் இந்த விஷயங்களை கண்டுகொள்ளவில்லை. இதனால் பொதுமக்கள் அவதிப்படும் நிலை தொடர்ந்து வருகிறது.

இதனால் தேனி ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், அதற்கிடையில், பொதுமக்கள் சென்று வரும் ரோட்டை பயணிக்க தக்க வகையில் சீரமைத்து தர வேண்டும் எனவும் வலியுறுத்தி அரசியல் கட்சிகள் போராட்டம், ஆர்ப்பாட்டம் என களம் இறங்கி உள்ளன. இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியும் புரட்சிகர சோசிலிஸ்ட் கட்சியும் இணைந்து தேனி தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்டப்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் UCPI மாவட்ட செயலாளர் வே.பெத்தாட்சி ஆசாத் , RSP மாவட்ட செயலாளர் கே.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் ராஜதுரை UCPI மாவட்ட துணைச் செயலாளர் ப.செல்லன், தேனி தாலுகா செயலாளர் ஆர்.வெள்ளைப்பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.சுப்பிரமணி, வீ.கோவிந்தராஜ், எம்.துரைக்கண்ணன் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கடேசன், செல்லப்பாண்டியன் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட இரண்டு கட்சி உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

UCPI மாவட்ட செயலாளர் வே.பெத்தாட்சி ஆசாத் கூறுகையில், தேனியில் ரயில்வே மேம்பாலம் கட்டும் ரோட்டை ஆரோக்கியம் மிகுந்த நபரால் கூட கடந்து செல்ல முடியாது. எந்த வாகனமும் செல்ல முடியாத அளவு படுபயங்கர மோசம் என்ற நிலையில் உள்ளது. இதில் தினமும் ஏராளமான ஆம்புலன்ஸ்கள் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்கின்றன. ஆம்புலன்ஸ்கள் செல்ல வேறு எந்த வழியும் இல்லை.

இந்த சிக்கல் நிறைந்த நிலையில், வேண்டுமென்றே பாதை பணிகளை அதிகாரிகளும், ஒப்பந்ததாரரும் தாமதம் செய்து வருகின்றனர். இப்படி பணிகளை தாமதம் செய்வதால், அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததாரருக்கும் திட்டமதிப்பீடு உயர்வதன் மூலம் லாபம் கிடைக்கலாம். ஆனால் பொதுமக்கள் படும் துயரம் சொல்லி மாளாது. இந்த நிலை நீடித்தால், அடுத்து அத்தனை அரசியல்கட்சிகளையும் திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு கூறினார்.

Tags:    

Similar News