சென்னையில் அண்ணாமலை... டெல்லி தலைமை சொன்னது என்ன

அனாவசியமாக சர்ச்சையை உண்டாக்க வேண்டாம் கட்சியை வளர்க்கும் வேலையை பாருங்கள் என்று டெல்லி பாஜக அண்ணா மலையிடம் கூறியுள்ளது

Update: 2023-08-09 07:54 GMT

அண்ணாமலை- எடப்பாடி- ஜே.பி.நட்டா

தமிழகத்தில் பாதயாத்திரையில் ஈடுபட்டிருந்த அண்ணாமலை, சிறிய இடைவெளி எடுத்து சென்னை சென்றிருந்தார். சென்னையில் அண்ணாமலை தங்கியுள்ள நிலையில், டெல்லி பாஜக வில் நடந்தது என்ன என்று டெல்லி மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் கருத்து தெரிவித்துள்ளார்.

அதிமுக பாஜக இடையிலான மோதல் மீண்டும் உச்சம் அடைந்துள்ளது. டெல்லி பாஜகவோடு அதிமுக தலைவர்கள் நட்பாகவே உள்ளனர். ஆனால் தமிழ்நாடு பாஜக தலைவர்களுடன் அதிமுகவிற்கு அவ்வளவு சுமுகமான உறவு இல்லை. முக்கியமாக அண்ணாமலை - எடப்பாடி இடையே அவ்வளவு நட்பான உறவு இல்லை. இந்த நிலையில் தான் தனது நடைபயண யாத்திரைக்கு இடையே பேட்டி அளித்த அண்ணாமலை, ஓ. பன்னீர்செல்வத்தை நாங்கள் புறக்கணிக்கவில்லை. என்டிஏ கூட்டணி குறித்து முடிவு செய்வோம். அவர் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல விஷயங்களை செய்துள்ளார். தமிழ்நாட்டில் இருக்கவே நான் விரும்புகிறேன். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர வேண்டும். அதற்குத்தான் பாஜகவில் இணைந்தேன்.

கட்சியின் தொண்டனாக தலைமை சொல்வதை கேட்பேன். அவர்கள் சொல்வதை கேட்டு அவர்களின் வெற்றிக்கு பாடுபடுவேன். டெல்லி போவதில், அங்கே பதவி பெறுவதில் எனக்கு விருப்பம் இல்லை. அதனால் லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டேன். தமிழ்நாட்டில் தான் நான் அரசியல் செய்வேன், என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.

இந்த நிலையில் தான் அண்ணாமலை தனது நடைப்பயணத்தில் பிரேக் எடுத்துள்ளார். மதுரையில் நடைபயணம் மேற்கொள்ள வேண்டிய அண்ணாமலை பிரேக் எடுத்துள்ளார். அண்ணாமலை டெல்லிக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மாறாக அண்ணாமலை சென்னை சென்றுள்ளார். அங்கே அண்ணாமலை ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் அண்ணாமலையின் இந்த பிரேக் குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் பேட்டி அளித்துள்ளார். இது தொடர்பாக யூ டியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், அண்ணாமலை பயணத்திற்கு இடையே ஏன் ரெஸ்ட் எடுக்க வேண்டும். அந்த அளவிற்கு அவர் நடக்கவே இல்லையே. அந்த அளவிற்கு அவர் நடக்காத போது ஏன் ஓய்வு. 120 -150 கிமீ அவர் நடந்தாரா? இல்லையே? அவர் மொத்தமாக நடந்ததே 30 - 40 கிலோ மீட்டர் தூரம்தான்.

அதற்கு மேல் அவர் நடந்திருக்க முடியாது. அவர் நடப்பதே இல்லையே. கேரவனில் தான் செல்கிறார். ஒருநாளுக்கு அதிகபட்சம் 3- 4 கிலோ மீட்டர் தான் நடக்கிறார். டவுன் எல்லை வரை பேருந்தில் வந்து விட்டு அதன்பின் உள்ளே நடந்து வருகிறார். மீண்டும் கேரவனில் செல்கிறார். அவர் செய்வது யாத்திரை என்று சொல்கிறார்கள். நடைபயணம் இல்லை என்கிறார்கள். அதேபோல் அண்ணாமலைக்கு எதிராக டெல்லி புகார் சொல்லி இருக்கிறது.

நீங்கள் அனாவசியமாக சர்ச்சையை உண்டாக்க வேண்டாம், கட்சியை வளர்க்கும் வேலையை பாருங்கள் என்று டெல்லி அவரிடம் கூறி உள்ளது. ஓபிஎஸ் குறித்து அண்ணாமலை மதுரையில் பேசியது சர்ச்சை ஆகி உள்ளது. இதை பற்றி நட்டாவிடம் டெல்லியில் அதிமுக வேலுமணி, தங்கமணி மற்றும் எடப்பாடி ஆகியோர்  புகார் சொல்லி உள்ளனர். தேவையில்லாமல் பிரச்னை செய்கிறார் என்று புகார் சொல்லி உள்ளனர். ஓபிஎஸ் பற்றி எல்லாம் அண்ணாமலை ஏன் பேசுகிறார். நீங்கள் ஒரு மாதிரி பேசுகிறீர்கள்.. அண்ணாமலை ஒரு மாதிரி பேசுகிறார் என்று நட்டாவிடம் அதிமுகவினர் புகார் சொல்லி உள்ளனர். அண்ணாமலை பேச்சு காரணமாக அதிமுக - பாஜக தலைவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதை டெல்லியில் அதிமுகவினர் பேசி உள்ளனர்.

இதனால் அண்ணாமலையிடம் நீங்கள் அனாவசியமாக சர்ச்சையை உண்டாக்க வேண்டாம், கட்சியை வளர்க்கும் வேலையை பாருங்கள் என்று டெல்லி அவரிடம் கூறி உள்ளது. இதனால் அண்ணாமலை ஷாக் என்று கேள்வி. இவ்வாறு கூறியுள்ளார்.

Tags:    

Similar News