யுடியூப்பில் அவதூறு செய்தி: தேனி எஸ்.பி.யிடம் தி.மு.க. புகார்

தன்னைப்பற்றி யூடியூப்பில் அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி எஸ்.பி.,யிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.;

Update: 2022-05-19 14:01 GMT

தங்க தமிழ்ச்செல்வன்.

தேனி வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் தங்க.தமிழ்செல்வன். இவரை பற்றி யூடியூப் சேனல் ஒன்றில் செய்தி வெளியானது. இந்த செய்தி முற்றிலும் தவறானது. தன்னைப்பற்றி மிகவும் தவறாக சித்தரித்து இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதனால் எனக்கு மிகவும் மனஉலைச்சல் ஏற்பட்டுள்ளது. உண்மையில்லாத செய்திகளை வெளியிட்டு எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரேவிடம் தங்க.தமிழ்செல்வன் புகார் செய்துள்ளார்.

Tags:    

Similar News