உத்தமபாளையம் அருகே கடனை திரும்ப கேட்டவர் கத்தியால் குத்திக் கொலை

உத்தமபாளையம் அருகே கொடுத்த கடனை கேட்டவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.;

Update: 2022-06-20 03:08 GMT
உத்தமபாளையம் அருகே கடனை திரும்ப கேட்டவர் கத்தியால் குத்திக் கொலை

பைல் படம்.

  • whatsapp icon

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே காக்கில்சிக்கையன்பட்டியை சேர்ந்தவர் அமாவாசை, 40. டிராக்டர் டிரைவரான இவர், இதே ஊரை சேர்ந்த தேவி என்பவருக்கு கடன் கொடுத்துள்ளார்.

கடனை திரும்ப கேட்க தேவியின் வீட்டிற்கு சென்ற போது, தேவியின் மகன் சங்கர், 19, அடிக்கடி வந்து கடன் கேட்டு தொல்லை தருகிறாயா? என கேட்டு தகராறு செய்து, அம்மாவாசையை கத்தியால் குத்தினார். பலத்த காயமடைந்த அம்மாவாசை தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். உத்தமபாளையம் இன்ஸ்பெக்டர் சிலைமணி சங்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News