கடன் தொல்லையால் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை

கம்பத்தில் கடன் தொல்லையால் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-06-26 02:35 GMT

தேனி மாவட்டம், கம்பம் பள்ளிவாசல் 2வது தெருவில் வசித்தவர் ஷேக் அப்துல்காதர், 50. இவர் ரோட்டோர வடைக்கடை நடத்தி வந்தார். இவருக்கு வியாபாரம் மந்தமாக இருந்து வந்துள்ளது. இதனால் கடன் தொல்லைகளும் பெருகி விட்டன.

இந்நிலையில் கடன் தொல்லையால் அவதிப்பட்ட அப்துல்காதர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News