வருஷநாடு மலைப்பகுதியில் கிழங்கு தோண்டி சாப்பிட்ட ஆதிவாசி இளம்பெண் சாவு

வருஷநாடு மலைப்பகுதியில் கிழங்கு தோண்டி சாப்பிட்ட ஆதிவாசி இனத்தை சேர்ந்த இளம்பெண் ஒவ்வாமை ஏற்பட்டு உயிரிழந்தார்.

Update: 2021-12-05 13:47 GMT

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வருஷநாடு மலைப்பகுதியில் பழங்குடியின மக்கள் கிழங்கு தோண்டி கொண்டு வந்து விற்பனை செய்வது, மலைத்தேன் சேகரித்து விற்பது, மலையில் விளையும் நெல்லி, புளி உள்ளிட்ட பொருட்களை சேகரித்து விற்பது அவர்களது தொழிலாக உள்ளது.

இந்நிலையில் தாழையூத்து கிராமத்தை சேர்ந்தவர் வாசியம்மாள், 26. இவர் தனது கணவர் மற்றும் உறவினர்களுடன் மலைப்பகுதிக்கு சென்று தங்கியிருந்து கிழங்கு தோண்டினார். பின்னர் அந்த கிழங்கை அங்கேயே அவித்து சாப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து கிழங்கு சாப்பிட்டதால்வாசியம்மாளுக்கு ஒவ்வாமை காரணமாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. பின்னர் வீட்டுக்கு வந்த அவர் உடல்நிலை மிகவும் மோசமாகி உயிரிழந்தார்.

இதுகுறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News