ஆண்டிபட்டி அருகே விபத்தில் இருந்து தப்ப ஓடும் லாரியிலிருந்து குதித்தவர் சாவு
ஆண்டிபட்டி அருகே விபத்தில் இருந்து தப்புவதற்காக ஓடும் லாரியில் இருந்து குதித்தவர் எதிரே வந்த பஸ் மோதி உயிரிழந்தார்.;
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே கன்னிமங்கலத்தை சேர்ந்தவர் செல்வக்குமார், 29. இவர் லாரியை ஓட்டிக் கொண்டு மதுரை ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
ஆண்டிபட்டி வனச்சரக அலுவலகம் எதிரே அரசு பஸ் வந்தது. எங்கே பஸ்சும், லாரியும் மோதி விடுமோ என்ற அச்சத்தில் செல்வக்குமார் லாரியில் இருந்து குதித்து விட்டார். அவர் குதித்ததும் லாரி திசைமாறி ரோட்டோர பள்ளத்தில் இறங்கி நின்றது.
எதிரே வந்து கொண்டிருந்த அரசு பஸ் குதித்த செல்வக்குமார் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே செல்வக்குமார் இறந்தார். ஆண்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.