மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் வனத்துறை தற்காலிக பணியாளர் உயிரிழப்பு

கூடலுார் அருகே வனத்துறை சோதனைச் சாவடியில் பணியாற்றிய தற்காலிக பணியாளர் சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்தார்.;

Update: 2022-05-19 12:42 GMT

சிகிச்சை கிடைக்காமல் பலியான வனத்துறை தற்காலிக பணியாளர் கணேஷ்பாண்டியன்.

தேனி மாவட்டம், கூடலுார் அருகே குள்ளப்பகவுண்டன்பட்டியில் மின்நிலையம் செல்லும் வழியில் உள்ள வனத்துறை சோதனைச் சாவடியில் தற்காலிக பணியாளராக பணியாற்றியவர் கணேஷ்பாண்டியன், 35. இவரது உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற தனது பொறுப்பு அதிகாரிகளிடம் விடுமுறை கேட்டுள்ளார்.

ஆனால் அதிகாரிகள் தர மறுத்து, விடுமுறை எடுத்தால் அந்த இடத்திற்கு வேறு ஒருவரை நியமித்து விடுவோம் எனவும் கூறியுள்ளனர். இதனால் கணேஷ்பாண்டியன் மருத்துவ சிகிச்சை பெறாமலேயே பணியாற்றி உள்ளார். இந்நிலையில் இன்று பணியில் இருக்கும்போதே மாரடைப்பால் அவர் உயிரிழந்தார்.

இது குறித்து அவரது உறவினர்கள் கூறுகையில், தற்காலிக பணியாளர் கணேஷ் பாண்டியனை சிகிச்சை பெற அதிகாரிகள் அனுமதித்து இருந்தால், அவரது உயிரை காப்பாற்றியிருக்கலாம். அதிகாரிகள் மருத்துவ விடுப்பு கூட தர மறுத்து விட்டனர். தற்போது அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்காவது அரசு உதவி செய்ய வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News