தோட்டத்தில் முககவசம் அணியாமல் பூச்சி மருந்து தெளித்தவர் சாவு
வீரபாண்டி அருகே தோட்டத்தில் முககவசம் அணியாமல் பருத்தி செடிகளுக்கு பூச்சி மருந்து தெளித்தவர் உயிரிழந்தார்.;
தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே ஜங்கால்பட்டியை சேர்ந்தவர் ராஜையா, (நாற்பத்தி எட்டு). இவர் முககவசம் அணியாமல், பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல், பருத்தி செடிகளுக்கு மருந்து தெளித்துள்ளார்.
இதனால் மருந்தை அதிகளவு நுகர்ந்ததன் காரணமாக சிறிது நேரத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டது. தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனி்ன்றி உயிரிழந்தார். வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.