மகள் காதல் திருமணம்: மனம் உடைந்த தாய் தற்கொலை..!

மகள் காதல் திருமணம் செய்ததால், மனம் உடைந்த தாய் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-05-18 04:33 GMT

தேனி ஊஞ்சாம்பட்டி அருகே அன்னஞ்சி மேலத்தெருவை சேர்ந்த ஆண்டவர் மனைவி ராணி, 48. இவருக்கு இரண்டு பெண்கள், ஒரு ஆண் மகன் உள்ளனர். மூத்த மகள் திருமணம் ஆகி கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டில் வந்து வசிக்கிறார். இரண்டாவது மகள் காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால் வேதனை அடைந்த தாய் ராணி, தனது இருமகள்களின் வாழ்க்கையும் சங்கடத்தில் உள்ளதாக கருதி மனம் உடைந்து துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். அல்லிநகரம் இன்ஸ்பெக்டர் கண்ணன் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News