போடியில் மகளை கொன்று, தாயும் தீக்குளி்த்து தற்கொலை
போடியில் குடும்ப பிரச்னை காரணமாக மகளை கொலை செய்து, தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம், போடி மேலச்சொக்கநாதபுரத்தை சேர்ந்த நல்லுச்சாமி மனைவி முத்துலட்சுமி, 26. இவர்களுக்கு ஹேமாஸ்ரீ என்ற எட்டு வயது குழந்தையும் இருந்தது. ஷேமாஸ்ரீ அரசு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், முத்துலட்சுமி வீட்டை பூட்டிக் கொண்டு தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டு தன் மகளையும் கட்டிப்பிடித்துக் கொண்டார். இந்த சம்பவத்தில் ஹேமாஸ்ரீ சம்பவ இடத்திலேயே இறந்தார். முத்துலட்சுமி தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். போடி தாலுகா போலீசார் குடும்ப பிரச்னையே இவர்களின் தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் சந்தேகித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.