மழையுடன் தொடங்கிய புத்தாண்டு: நிரம்பித் ததும்பும் அணைகள்

தேனி மாவட்டத்தில் புத்தாண்டு மலர்ந்துள்ள நிலையில், அனைத்து அணைகளும் நிரம்பிய நிலையில் உள்ளன.;

Update: 2022-01-01 03:30 GMT

நீர் நிரம்பி நிற்கும் முல்லை பெரியாறு அணை (பைல் படம்)

தேனி மாவட்டத்தில் நேற்று இரவு ஆண்டிபட்டியில் 4.8 மி.மீ., கூடலுாரில் 3.4 மி.மீ., மஞ்சளாறு அணையில் 12 மி.மீ., பெரியகுளத்தில் 9 மி.மீ., தேக்கடியில் ஒரு மி.மீ., சோத்துப்பாறையில் 6 மி.மீ., உத்தமபாளையத்தில் 2.3 மி.மீ., வைகை அணையில் ஒரு மி.மீ., மழை பதிவானது. புத்தாண்டு பிறக்கும் போதே இந்த பகுதிகளில் மழை பெய்து கொண்டிருந்தது.

அதேபோல் மாவட்டத்தில் வைகை அணை நீர் மட்டம் 68.77 அடியாகவும், முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் 141.90 அடியாகவும், மஞ்சளாறு அணை நீர் மட்டம் 52.80 அடியாகவும், சோத்துப்பாறை நீர் மட்டம் 126.31 அடியாகவும், சண்முகாநதி நீர்மட்டம் 44.80 அடியாகவும் இருக்கிறது.

மாவட்டத்தில் அனைத்து அணைகளும் நிரம்பி உள்ளன. அத்தனை அணைகளுக்கும் கணிசமான அளவு நீர் வரத்தும் உள்ளது. இதனால் நீர் வளத்தை பொறுத்தவரை இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News