தேனி மாவட்டத்தில் 8 நாட்களுக்கு மேல் சைபர் கொரோனா தொற்று

தேனி மாவட்டத்தில் தொடர்ச்சியாக எட்டாவது நாளாக இன்றும் யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை.;

Update: 2021-11-14 03:31 GMT

பைல் படம்.

தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ஆய்வகத்தில் நேற்று 695 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று காலை இதன் முடிவுகள் வெளியானது.

இதில் ஒருவருக்கு கூட தொற்று கண்டறியப்படவில்லை. இந்த மாதத்தில் மட்டும் 8 நாட்களுக்கு மேல் யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை. தேனி மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா தொற்று மிகுந்த கட்டுப்பாட்டிற்குள் உள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News