கம்பம் அருகே கள்ளரூபாய் நோட்டுகள் அச்சிட்டவர் கைது
கம்பம் அருகே கள்ளரூபாய் நோட்டுக்களை அச்சிட்டு புழக்கத்தில் விட்டவர் கைது செய்யப்பட்டார்.;
தேனி மாவட்டம், கம்பத்தில் குணசேகரன் என்பவர் கள்ள ரூபாய் நோட்டுக்களை அச்சிடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் இது குறித்து ரகசிய விசாரணை நடத்தினர். குணசேகரன் அச்சகத்தையும் சோதனையிட்டனர்.
அங்கு இருந்து 50 ரூபாய், 100 ரூபாய், 200 ரூபாய், 500 ரூபாய் கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு 86 ஆயிரம் ரூபாய். இவர் எத்தனை மாதங்களாக இந்த பணியில் ஈடுபட்டிருந்தார். எவ்வளவு ரூபாய் இதுவரை புழக்கத்தில் விட்டுள்ளார். இவரது பின்னணி என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.