தேனி-இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி- ஆம்புலன்ஸ் செல்ல வழி அமைத்த நிர்வாகம்.

தேனியில் தடுப்புகளில் அவசர தேவை வாகனங்கள் செல்ல வழி ஏற்பாடு செய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Update: 2021-05-28 08:03 GMT

#இன்ஸ்டா நியூஸ் செய்தி எதிரொலி.அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ் செல்ல வழி அமைத்த தேனி மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும்...

தேனி பாரஸ்ட் ரோட்டில் காவல்துறை சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருப்பது குறித்தும், இதனால் அப்பகுதியில் மக்களுக்கு ஏற்படும் சிரமம் குறித்தும் நமது இன்ஸ்டாஸ் நியூஸ் செய்திகள் வெளியிட்டது.அதன் சாராம்சம்


நேற்றைய விரிவான செய்தியின் சாரம்சம் தெரிந்து கொள்வதற்காக...

தேனி மாவட்டம், தேனி நகர் பகுதியில் உள்ள பாரஸ்ட் ரோடு முழுவதும் காவல்துறை சார்பாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தங்களது அன்றாட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

தேனி நகரின் முக்கிய சாலைகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தது.இந்த தடுப்பு வெளிகள் தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பாரஸ்ட் ரோடு திரும்பும் விலக்கு, புதிய பேருந்து நிலையத்திலிருந்து பாரஸ்ட் ரோடு வரும் இணைப்புச் சாலைகள் ஆகியவற்றில் முழுவதுமாக அடைக்கப்பட்டு   இருந்தது.

பொதுமக்களுக்கு தேவையான கேஸ் சிலிண்டர், குடிதண்ணீர் வாகனம், பால் வாகனம், காய்கறி வாகனம் , அவசர மருத்துவ சேவைக்கான ஆம்புலன்ஸ் வாகனம் உள்ளிட்ட எந்த வாகனமும் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.

மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து நோய் கட்டுப்பாட்டு பகுதியில் மட்டும் தடுப்பு வேலிகளை அமைக்கவும், மற்ற பகுதிகளில் உள்ள தடுப்பு வேலிகளை அகற்றவும், பொது மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மக்கள் மனுவை பெற்று அதனை செய்தியாக வெளிட்டதோடு மட்டுமல்லாமல் செய்தியின் இணைப்பு (லிங்க்) வாயிலாக மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவித்தோம்.உடனடியாக கவனிப்பதாக சொன்ன அதிகாரிகள் நேற்று மாலை அப்பனகுதியை மாற்றும் பணியில் ஈடுபட்டு அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ் மட்டும் செல்லும் வகையில் மாவட்ட நிர்வாகம் புதியதாக கதவு மற்றும் பூட்டு ஏற்பாடு செய்துள்ளது..

Tags:    

Similar News