தேனி மாவட்டத்தில் பலி 6 ஆனது. குறைகிறதா கொரோனா பரவல்?
தேனி மாவட்டத்தில் 3வது அலையில் கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.;
தேனி மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் 600ஐ எட்டிய தினசரி கொரோனா பாதிப்பு இன்று 295 ஆக குறைந்தது. நேற்று 971 பேர் கொரோனா தொற்று பரிசோதனை செய்து கொண்டனர். இதன் முடிவுகள் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இன்று காலை வெளியானது.
இதன்படி தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 295 ஆக குறைந்தது. நேற்றும் ஒருவர் தொற்றுக்கு பலியானார். இதனை தொடர்ந்து மூன்றாவது அலையில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆறு ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 20 பேர் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மதிப்பீடு செய்து பரவல் குறைந்து விட்டதாக கூற முடியாது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.