மூன்று நாட்களுக்கு பின்னர் சைபரை தொட்டது கொரோனா
தேனி மாவட்டத்தில் மூன்று நாட்களுக்கு பின்னர் இன்று யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை.;
தேனி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு இருந்து வந்த நிலையில் இன்று காலை மீண்டும் சைபர் தொற்று பதிவாகி உள்ளது.
நேற்று தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 285 பேர் கொரோனா தொற்று பரிசோதனை செய்தனர். இதில் வேலுாரை சேர்ந்த ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று பாதிப்பு இருந்தது. வேறு யாருக்கும் இல்லை.
குறிப்பாக தேனி மாவட்டத்தை சேர்ந்த யாருக்கும் பதிவாகவில்லை. தற்போது தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு ஒருவர் கூட சிகிச்சை பெறவில்லை என மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.