கூடலூரில் கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை

கூடலுாரில் கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2022-02-23 00:15 GMT

தேனி மாவட்டம் கூடலுாரை சேர்ந்த விவசாயி குபேந்திரன், 60. இவரது மனைவி சுந்தரி, 55. இவர்களது இரண்டு மகன்களும் வெளியூர்களில் வசிக்கின்றனர். வறுமையில் தவித்து வந்த கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று இருவரும் விஷம் குடித்தனர். உறவினர்கள் பார்த்து மருத்துவமனையில் சேர்க்கும் முன்னர் இருவரும் உயிரிழந்தனர். கம்பம் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News