நாளை தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி முகாம்
நாளை தமிழகம் முழுவதும் பல ஆயிரம் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் ஒமிக்ரான் வகை கொரோனா தற்போது கட்டுக்குள் வர தொடங்கி உள்ளது. குறிப்பாக தேனி மாவட்டத்தில் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 17 சதவீதம் பேருக்கு தொற்று பாதிப்பு இருந்தது. இன்று அதன் அளவு 7 சதவீதமாக குறைந்து விட்டது.
தேனி மாவட்டம் உட்பட தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள். தேனி மாவட்டத்தில் மட்டும் இன்றும் 15 சதவீதம் பேர் தடுப்பூசி போடவில்லை. குறிப்பாக இளம் சிறார்களுக்கு இன்னும் நாடு முழுவதும் தடுப்பூசி போடப்படவில்லை. இப்போது பரவி வரும் கொரோனா வீரியம் குறைந்த ஒமிக்ரான் வகையை சேர்ந்தது என்றாலும், தடுப்பூசி போடாதவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது.
தடுப்பூசி போட்டவர்களுக்கு தொற்று பரவல் ஏற்பட்டாலும், அவர்கள் மருத்துவமனையில் சேரும் அளவுக்கு கூட பாதிப்பில்லை.எனவே மாநிலம் முழுவதும் நாளை பல ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதில் முதல் டோஸ், இரண்டாம் டோஸ், பூஸ்டர் டோஸ் என மூன்று வகை தடுப்பூசி தேவைப்படுவர்களும் போட்டுக்கொள்ளலாம். முக கவசம் அணிவதும் மிகவும் கட்டாயம் என மருத்துவத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.