தேனியில் உயரும் கொரோனா பாதிப்பு: புதியதாக 16 பேருக்கு தொற்று

தேனியில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை மீண்டும் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.

Update: 2022-01-05 03:30 GMT

தேனி மாவட்டத்தில் , கடந்த மூன்று மாதங்களாகவே கொரோனா தொற்று மிகுந்த கட்டுக்குள் இருந்து வந்தது. எப்போதாவது ஒருமுறை மட்டுமே ஒன்று அல்லது இரண்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மீதம் உள்ள நாட்களில் யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒருவருக்கு தொற்று உறுதியானது. அடுத்தநாளே 3 ஆக உயர்ந்தது. நேற்று ஆறு பேருக்கு தொற்று உறுதியானது. இன்று காலை வெளியான முடிவுகளில் 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு வேகமாக பரவினால் அது ஒமிக்ரானாகத்தான் இருக்கும் என டாக்டர்கள் சந்தேகிக்கின்றனர்.

இதுதவிர இதுவரை மூன்று பேர் மட்டுமே தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். மற்றவர்கள் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே தற்போதய சூழலில் ஒமிக்ரான் பரவல் அதிகமாக இருக்கிறது. டெல்டா வைரசும் நம்மை விட்டு போகவில்லை. எனவே தற்போது பாதிக்கப்பட்டது ஒமிக்ரானா, டெல்டாவா என்பதை உறுதிப்படுத்துவதிலும், தனியாக பிரித்து பார்ப்பதிலும் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

ஒமிக்ரான் பெரும்பாலானோருக்கு அறிகுறி இல்லாமல் தான் இருக்கிறது. ஆனாலும் ஒரு சிலருக்கு கூடுதல் பாதிப்புகளை ஏற்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளன. அடுத்து வரும் நாட்களில் பரவல் மிக கடுமையாக உயரும் என்பதை கவனத்தில் கொண்டு மக்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News