தேனி மாவட்டத்தில் கிடுகிடுவென சரிந்தது கொரோனா பரவல்
தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்து விட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.;
தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று கிடுகிடுவென சரிந்தது. தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 350 பேர் தொற்று பரிசோதனைக்கு மாதிரிகள் கொடுத்திருந்தனர். இன்று காலை இதன் முடிவுகள் வெளியாகின. இதில் 60 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது.
தேனி மாவட்டத்தில் கடந்த வாரம் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 500ஐ கடந்து பதிவானது. தற்போது தினசரி பாதிப்பு இரண்டு இலக்கத்திற்கு குறைந்து விட்டது . இன்றைய நிலவரப்படி தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 18 பேர் மட்டுமே கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.