தேனி மாவட்டத்தில் புதியதாக 291 பேருக்கு கொரோனா தொற்று
தேனி மாவட்டத்தில் இன்று காலை வெளியான முடிவுகளின் அடிப்படையில் 291 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று 1193 பேர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். இதன் முடிவுகள் இன்று வெளியானது. இதன்படி 291 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர்களில் பலருக்கு மிதமான பாதிப்பு மட்டுமே உள்ளது.
தற்போது வரை தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 12 பேர் மட்டுமே கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த நான்கு நாட்களாக சராசரி தொற்று 250 முதல், 300 வரை பதிவாகி வந்தாலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிக, மிக குறைவு என அதிகாரிகள் தெரிவித்தனர்.