தேனியில் 300 பேருக்கும் மேல் கொரோனா பாதிப்பு; 5 பேர் மட்டுமே அனுமதி

தேனி மாவட்டத்தில் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2022-01-12 02:45 GMT

தேனி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் கொரோனா (ஒமிக்ரான்) தொற்று வேகமாக உயர்ந்து வருகிறது. இன்று காலை 82 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இந்த 5 நாட்களில் தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 300ஐ கடந்தது. ஆனால் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 5 பேர் மட்டுமே சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மற்றவர்கள் வீட்டுத்தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது கண்டறியப்படும் கொரோனா தொற்று ஒமிக்ரான் வகையை சேர்ந்ததாக இருக்கலாம். தொற்று பாதித்தவர்களுக்கு மிக, மிக லேசான அறிகுறி மட்டுமே தென்படுகிறது. எனவே அவர்களை வீட்டுத்தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தி வருகிறோம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News