தேனியில் கொரோனா பாதிப்பு இல்லை; மிரட்டி வருகிறது டெங்கு

தேனி மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக கொரோனா தொற்றால் ஒருவர் கூட பாதிக்கப்படாத நிலையில் டெங்கு பாதிப்பு மிரட்ட தொடங்கி உள்ளது.

Update: 2022-03-22 03:00 GMT

தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 3வது அலையான ஒமிக்ரான் பாதிப்பு ஏற்படுத்தாமலேயே கடந்து விட்டது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஒருவருக்கு கூட பாதிப்பு ஏற்படவில்லை. ஒருவர் கூட தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை.

ஆனால் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. அங்கொன்றும், இங்கொன்றுமாக டெங்கு மெல்ல தலைதுாக்கி வருகிறது. குறிப்பாக கம்பத்தில் டெங்கு பாதிப்பு தென்படத்தொடங்கி உள்ளது. இதனால் கம்பம் நகராட்சியில் கொசு ஒழிப்பு மருந்து தெளிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்டம் முழுவதும் உள்ளாட்சி நிர்வாகங்கள் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணிகள் மற்றும் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

Tags:    

Similar News