தேனி மாவட்டத்தில் மீண்டும் சைபரை தொட்டது கொரோனா பாதிப்பு

தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நேற்று, மீண்டும் சைபர் என்ற எண்ணிக்கையை தொட்டது.;

Update: 2022-02-23 01:30 GMT

தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை எதிர்பார்த்ததை விட மிக குறைந்த பாதிப்பையே கொடுத்தது. மூன்றாவது அலையில்,  அதிகபட்ச தினசரி பாதிப்பு  550ஐ தொட்டது. பின்னர் படிப்படியாக குறைந்து கடந்த வாரம் முதல் தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கத்திற்கு வந்தது.

நேற்று, மீண்டும் பாதிப்பு சைபரை தொட்டது. தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று 259 பேர் பரிசோதனைக்கு மாதிரிகள் கொடுத்திருந்தனர். இதன் முடிவுகள் இன்று காலை 8 மணிக்கு வெளியானது. இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. அதேபோல் ஒருவர் கூட தற்போது தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News