தேனி மாவட்டத்தில் நேற்று 180ஐ எட்டியது கொரோனா
தேனி மாவட்டத்தில் ஒமிக்ரான் தொற்று கொரோனா பாதிப்பு 180ஐ எட்டியுள்ளது.
தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று 1584 பேர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். இதில் 180 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
நான்கு மாதங்களாக முழு கட்டுப்பாட்டிற்குள் இருந்த கொரோனா தொற்று திடீரென கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவதற்கு ஒமிக்ரான் வகை வைரஸ் தொற்றே காரணம். தற்போது தொற்று கண்டறியப்படுபவர்களில் 98 சதவீதம் பேர் வரை தனிமையில் சிகிச்சை அளிக்கப்படும் வகையில் மிதமான தொற்று பாதிப்புடன் தான் உள்ளனர் என தேனி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.