தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் 101வது நாளாக யாருக்கும் கொரோனா பதிவு இல்லை

தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இன்று தொடர்ச்சியாக 101வது நாள் கொரோனா நெகடிவ் என ரிசல்ட் பதிவாகி உள்ளது.

Update: 2022-06-03 02:30 GMT

பைல் படம்.

தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யும் வசதி உள்ளது. ஒரு நாளைக்கு மூன்று முறை இப்படி பரிசோதனை செய்ய முடியும். ஆக தினமும் 12 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யும் வசதி உள்ளது. இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டாக கொரோனா தொற்று பாடாய்படுத்தி வந்த நிலையில் சில மாதங்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்தது. கடந்த 101 நாட்களாக தொடர்ச்சியாக கொரோனா தொற்று சைபர் என்ற இலக்கிலேயே உள்ளது. பக்கத்தில் உள்ள கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு இன்னும் இருந்து வரும் நிலையில், தேனி மாவட்டத்தில் மிகவும் நல்ல முறையில் தொற்று கட்டுப்பாட்டுடன் உள்ளது. தேனி மாவட்டத்தில் பெரும்பாலானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதே இதற்கு காரணம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News