கம்பம் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று
கம்பம் எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.;
கம்பம் எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன்.
கம்பம் சட்டமன்ற தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ ராமகிருஷ்ணனுக்கு லேசான சளி, காய்ச்சல் பாதிப்பு காணப்பட்டது. அவர், தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பரிசோதனை செய்தார். அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து, சிகிச்சைக்காக அவரை தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தற்போது, நல்ல நிலையில் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.