தேனியில் மீண்டும் கொரோனா தொற்று: சுகாதாரத்துறை அதிர்ச்சி

தேனி மாவட்டத்தில் மீண்டும் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மருத்துவ, சுகாதாரத்துறைகள் அதிர்ச்சி அடைந்துள்ளது.;

Update: 2022-06-19 03:45 GMT

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் மக்கள் தொகையில் 90 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தவிர 60 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டு விட்டனர். வெகுசிலர் மட்டுமே தடுப்பூசி போடவில்லை. தமிழகத்தின் பிற மாவட்டங்களை ஒப்பிடுகையில் தேனி மாவட்டத்தில் கொரோனா மிகுந்த கட்டுப்பாடுகளுடன் தான் இருந்தது.

இரண்டாம் அலை முடிந்த பின்னர் தேனி மாவட்டத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. தொடர்ச்சியாக 125 நாட்களுக்கும் மேல் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று 34 பேர் கொரோனா பரிசோதனைக்கு மாதிரிகள் கொடுத்திருந்தனர். இவர்களின் பரிசோதனை முடிவுகள் இன்று வெளியானது. இதில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், தேனி மாவட்ட நிர்வாகமும், மருத்துவ, சுகாதாரத்துறைகளும் அதிர்ச்சியில் உள்ளன. தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News