தேனி மாவட்டத்தில் இன்றும் கொரோனா சைபர் தொற்று

தேனி மாவட்டத்தில் இன்றும் யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.;

Update: 2021-12-05 03:49 GMT

பைல் படம்.

தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட தினமும் சராசரியாக 500 முதல் 700 பேருக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனைகள் நடந்து வருகிறது. இன்றும் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை.

கடந்த மூன்று மாதத்தில் 30 நாட்களுக்கும் மேலாக மாவட்டத்தில் சைபர் தொற்று நாட்களாக கண்டறியப்பட்டுள்ளது. மீதம் உள்ள நாட்களில் ஒன்று அல்லது இரண்டு பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையின் கொரோனா வார்டில் 4 பேருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 3 மாதமாக கொரோனா தொற்றுக்கு தேனி மாவட்டத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது என தேனி மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News