தேனி மாவட்டத்தில் இன்றும் கொரோனா சைபர் தொற்று

தேனி மாவட்டத்தில் இன்று யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என தேனி மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Update: 2021-12-04 04:18 GMT

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக தலா ஒன்று அல்லது இரண்டு என பதிவாகி வந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்று மீண்டும் சைபர் தொற்றாக கண்டறியப்பட்டுள்ளது.

தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 547 பேர் தங்களுக்கு காய்ச்சல் இருப்பதாக கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.

ஆனால் இதில் யாருக்கும் தொற்று இல்லை என தேனி மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News