தேனி மாவட்டத்தில் 15வது நாளாக கொரோனா சைபர் தொற்று
தேனி மாவட்டத்தில் தொடர்ச்சியாக 15 நாட்களாக கொரோனா சைபர் தொற்று பதிவாகி வருகிறது.;
தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் கடந்து சென்றது. மூன்றாவது அலை முடிவுக்கு வந்து பதினைந்து நாட்களுக்கு மேல் ஆகியும் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஒருவர் கூட கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறவில்லை.
தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ஆய்வகத்தில் ஒரு ஷிப்டுக்கு ஒரே நேரத்தில் நான்கு ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறிய முடியும். தினமும் மூன்று ஷிப்டுகளில் பனிரெண்டாயிம் பேருக்கு கண்டறிய முடியும். இருப்பினும் கடந்த பதினைந்து நாட்களாக ஒருவருக்கு கூட தொற்று கண்டறியப்படவில்லை. இதனால் தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று முழு அளவில் முடிவுக்கு வந்துள்ளதாக கருதலாம். ஆனால் அதிகாரப்பூர்வமாக அரசு தான் அறிவிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.