தேனி பகுதிகளில் மக்காச்சோளத்திற்கு கூடுதல் விலை :சாகுபடி பரப்பு அதிகரிப்பு

Corn Cultivation Excess தேனி மாவட்டத்தில் மக்காச்சோளத்திற்கு நல்ல விலை கிடைப்பதால் மக்காச்சோள சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது.

Update: 2023-12-18 06:09 GMT

Corn Cultivation Excess 

தேனி மாவட்டத்தில் மக்காச்சோளம் சாகுபடி பரப்பு ‛கிடுகிடு’வென அதிகரித்துள்ளது. மெல்ல அதிகரித்து வந்த பருத்தி சாகுபடி பரப்பு இந்த ஆண்டு மீண்டும் வீழ்ந்தது.

தேனி மாவட்டத்தில் ஆண்டுதோறும் 22 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பில் (9 ஆயிரம் எக்டேர்) மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது வழக்கத்தை விட இந்த ஆண்டு மக்காச்சோளத்திற்கு கூடுதல் விலை கிடைக்கிறது. ஒரு கிலோ மக்காச்சோளம் 26 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இந்த ஆண்டு விவசாயிகள் வழக்கத்தை விட 3250 ஏக்கர் கூடுதல் பரப்பில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளனர். மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்கினால் அதனை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து விவசாயிகள் தேவையான அளவு பயிற்சி பெற்றுள்ளனர். எனவே படைப்புழு தாக்குதல் அபாயம் பற்றி கவலைப்படாமல் விலை அதிகம் உள்ளது எனக்கருதி மக்காச்சோளம் விதைத்துள்ளனர் என வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Corn Cultivation Excess


வழக்கமாக பருத்தி தேனி மாவட்டத்தில் 6250 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. பருத்திக்கும் தற்போது நல்ல விலை கிடைக்கிறது. ஆனால் மக்காச்சோளத்திற்கு விளையும் போது பராமரிப்பு செலவுகள் மிக, மிக குறைவு. அறுவடை செலவும் குறைவு. பருத்திக்கு விவசாய சாகுபடி, பராமரிப்பு செலவுகள் அதிகம். அறுவடையும் மெல்ல, மெல்ல கிடைக்கும். மக்காச்சோளம் குறிப்பிட்ட சில நாட்களில் ஒரே அறுவடையில் பணம் பார்த்து விடலாம். பருத்தியில் பணம் பார்ப்பது மிக, சிரமம். எனவே விவசாயிகள் பருத்தியை விட மக்காச்சோளம் சாகுபடி செய்ய முன்னுரிமை கொடுக்கின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News