தேனி மாவட்டத்தில் இன்று மூன்று பேருக்கு மட்டுமே கொரோனா தாெற்று உறுதி

தேனி மாவட்டத்தில் இன்று மூன்று பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2021-08-06 03:15 GMT

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது அலை வெளுத்து வாங்கி விட்டது. தினசரி தொற்று ஆயிரத்தை எட்டியது. அதேபோல் இறப்புகளும் அதிகம் இருந்தன. மக்கள் மிரண்டு போய் இருந்தனர்.

இந்நிலையில் படிப்படியாக குறைந்து வந்த தொற்று நேற்று முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதாக தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று காலை  8 மணி நிலவரப்படி, தேனி மாவட்டத்தில் மூன்று பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தேனியை ஒட்டி உள்ள கேரள மாநிலத்தில் பாதிப்பு கடுமையாக உள்ள நிலையில், தினமும் கேரளாவில் இருந்து பல ஆயிரம் பேர் தேனி மாவட்டம் வந்து செல்கின்றனர். தேனி மாவட்டத்தில் கட்டுபாட்டிற்குள் வந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து விடக்கூடாதே என்ற கவலையில், மருத்துவ, சுகாதாரத்துறைகள் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு கேரள எல்லையில் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன என மருத்துவக் கல்லுாரி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News