தேனி மாவட்டத்தில் தொடரும் மழை: 5வது நாளாக வைகையில் தொடரும் வெள்ளம்

தேனி மாவட்டத்தில் பெய்யும் மழையால் வைகை அணையில் ஐந்தாவது நாளாக வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Update: 2021-12-04 04:23 GMT

மேகமலைப்பகுதியில் பெய்யும் மழையால் வருஷநாடு மூல வைகை ஆற்றில்  ஐந்தாவது நாளாக வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் வைகை அணைக்கு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. வந்த தண்ணீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்பட்டதால், மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்டங்களில் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தற்போது ஐந்தாவது நாளாக இன்றும் வைகை அணைக்கு விநாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது. அதே அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று முதல் மூன்று நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், வைகைக்கு நீர் வரத்து மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்ப்பதாகவும், அணையின் நீர் மட்டம் 70.11 அடியாக உள்ளது எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேபோல் முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் 141.90 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 3584 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 1867 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை, சண்முகாநதி அணைகளும் நிரம்பி வழிகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News