தேனி சிவராம் நகரில் 5வது முறையாக கோட்டையை கைப்பற்றியது காங்கிரஸ்
தேனி சிவராம்நகரில் காங்கிரஸ் தொடர்ந்து ஐந்தாவது முறையாக தனது வெற்றியை பதிவு செய்துள்ளது.;
தேனி நகராட்சி 14வது வார்டு சிவராம் நகரில் கண்ணாயிரம் குடும்பத்தினர் தான் தொடர்ச்சியாக காங்., கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று வருகின்றனர். ஏற்கனவே கை சின்னத்தில்போட்டியிட்டு வெற்றி பெற்றனர். தற்போது ஐந்தாவது முறையாக இவர்களது குடும்பத்தில் இருந்து நாகராஜ் என்பவர் கை சின்னத்தில் போட்டியிட்டார். இந்த முறையும் இவர்களே வெற்றியை கைப்பற்றி சிவராம் நகர் காங்., கோட்டை என்பதை நிரூபித்துள்ளனர்.