மின் கட்டண உயர்வை கண்டித்து தேனியில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து தேனியில் பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-07-24 12:41 GMT

தேனியில் பா.ஜ.க, நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் கே.கே.ஜெயராம்நாடார், சிறப்பு பேச்சாளர் புரட்சிகவிதாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள், தொழிலதிபர்கள் உட்பட அத்தனை பேரையும் பாதிக்கும் மின் கட்டண உயர்வை கண்டித்து தேனியில் பா.ஜ.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேனி மாவட்ட  கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பி.சி.பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட வர்த்தக அணி தலைவர் கே.கே.ஜெயராம் நாடார், துணைத்தலைவர் வினோத்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் ரவிக்குமார், நகர தலைவர் மதிவாணன், மாவட்ட துணைத்தலைவர் பாண்டியராஜ், மாநில துணைத்தலைவர் (சிறப்பு பேச்சாளர்) புரட்சிகவிதாசன், மாநில நிர்வாகி நாராயணபிரபு மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News