போடி பைபாஸ் சந்திப்பில் கான்கிரீட் ரவுண்டானா?

போடி பைபாஸ் சந்திப்பு, போடி விலக்கு சந்திப்புகளில் நிரந்தரமாக கான்கிரீட் ரவுண்டானா அமைக்க இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்

Update: 2023-07-10 08:45 GMT

தேனி இந்து எழுச்சி முன்னணி மாவட்ட அலுவலகத்தில் நடந்த வாரவழிபாட்டு கூட்டத்தில் உறுப்பினர்கள் பங்கேற்று ஆலோசனை நடத்தினர்.

தேனி இந்து எழுச்சி முன்னணி மாவட்ட அலுவலகத்தில் வார வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இந்து எழுச்சி முன்னணியின் மாவட்ட செயலாளர் இராமமூர்த்திஜீ தலைமை வகித்தார்.

இந்து எழுச்சி முன்னணியின் நகர பொருளாளர் நாகர்கோயில் இராஜேஷ்குமார் ஜீ முன்னிலை வகித்தார். இந்து எழுச்சி முன்னணியின் மாவட்ட தலைவர் இராமராஜ் ஜீ கலந்து கொண்டு வழிகாட்டுதல்களை வழங்கிப் பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பெரியகுளம் முதல்  குமுளி பைபாஸ் சாலையில் சந்திக்கும் போடிநாயக்கனூர் பிரிவில் மற்றும் விலக்கில் சில மாதங்களாக தொடர்ந்து விபத்துகள் நடந்த வண்ணம் இருந்தது. இதனை கருத்தில் கொண்டு தேனி மாவட்ட காவல் துறையின் துரித நடவடிக்கையின் மூலம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி தலைமையில் கம்பிகள் மூலம் தற்காலிக ரவுண்டான அமைக்கப்பட்டு அந்த இடங்களில் மட்டும் போக்குவரத்தில் சிறிய அளவில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது.

இதனால் விபத்துகள் குறைந்து இருக்கிறது. மாவட்ட காவல்துறைக்கு மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுதலையும் இந்து எழுச்சி முன்னணி தெரியப்படுத்திக் கொள்கிறது. இந்த இடத்தில் கான்கிரீட் மற்றும் பூங்காவுடன் கூடிய நிரந்தர ரவுண்டானா அமைக்க வேண்டும். இதற்கு பிற அரசுத்துறைகளும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

கடந்த சில தினங்களுக்கு முன் தேனி அல்லிநகரத்தில் தெரு நாய் கடித்து சிறுவன் ஒருவர் கொடூரமாக பாதிக்கப்பட்டார். அவர் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் குணமடைந்தார். நாய்களை கட்டுப்படுத்த தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. பொதுமக்கள் நலன் கருதி நகராட்சி நிர்வாகம் இனியும் வேடிக்கை பார்க்காமல் தெரு நாய்களை கட்டுப்படுத்த முன் வர வேண்டுமென இந்து எழுச்சி முன்னணி சார்பில் கேட்டு கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News