நுாறு சதவீதம் தடுப்பூசி செலுத்திய கிராம ஊராட்சி தலைவர்களுக்கு பாராட்டுச்சான்று

தேனி மாவட்டத்தில் நுாறு சதவீதம் தடுப்பூசி போடும் கிராம ஊராட்சி தலைவர்களுக்கு, பாராட்டுசான்று வழங்கப்படும்.

Update: 2021-08-31 08:30 GMT

போடி அணைக்கரைப்பட்டியில் கொரோனா தடுப்பூசி முகாமினை பார்வையிட்ட கலெக்டர் முரளீதரன்.


தேனி மாவட்டத்தில் தங்கள் கிராமங்களில் வசிக்கும் அத்தனை மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கும் ஊராட்சி தலைவர்களுக்கு பரிசும், பாராட்டுச்சான்றும் வழங்கப்படும். இதற்கான விழா அந்தந்த கிராம ஊராட்சிகளிலேயே கலெக்டர் தலைமையில் நடைபெறும் என கலெக்டர் முரளீதரன் தெரிவித்தார்.

தேனி மாவட்டம், போடி ஒன்றியம் அணைக்கரைப்பட்டி கிராம ஊராட்சியில் தடுப்பூசி போடும் பணிகளை கலெக்டர் முரளீதரன் இன்று ஆய்வு செய்தார். அப்போது இன்று ஒரே நாளில் இந்த கிராமத்தில் மட்டும் 500 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. கிராமத்தில் பாதிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டு விட்டது என தலைவர், மற்றும் பணியாளர்கள் தெரிவித்தனர்.

அவர்களுக்கு பதிலளித்த கலெக்டர், 'பாதிப்பேருக்கு தடுப்பூசி போட்டது பெருமை இல்லை. நுாறு சதவீதம் பேருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும். அப்படி போட்டு முடிக்கும் கிராமத்தில் கலெக்டர் அலுவலகம் சார்பில் விழா நடத்தப்பட்டு தலைவர் மற்றும் பணியாளர்கள் கவுரவப்படுத்தப்பட்டு, பாராட்டு சான்று வழங்கப்படும். இந்த விழா எனது தலைமையிலேயே நடக்கும்' என்றார்.

Tags:    

Similar News