காமெடி நடிகர் யோகிபாபுவின் படப்பிடிப்பில் அடிதடி: உதவியாளர் படுகாயம்

போடியில் போடியில் காமெடி நடிகர் யோகிபாபு படப்பிடிப்பி்ல் அடிதடி. உதவியாளர் பலத்த காயமடைந்தார்.;

Update: 2021-12-15 12:31 GMT
காமெடி நடிகர் யோகிபாபுவின் படப்பிடிப்பில்  அடிதடி: உதவியாளர் படுகாயம்

படப்பிடிப்பில் நடந்த அடிதடியில் காயத்துடன் யோகிபாபு உ தவியாளர் சதாம்உசேன்.

  • whatsapp icon

போடியில் காமெடி நடிகர் யோகிபாபு படப்பிடிப்பி்ல் அடிதடி நடந்தது. ஒருவர் காயமடைந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

போடி, குரங்கனி, கொட்டகுடி பகுதியில் காமெடி நடிகர் யோகிபாபு நடிக்கும் மலையோரம் வீசும் காற்று படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக குரங்கனி மலையில் யோகிபாபு தொடர்புடைய காட்சிகள் படம் பிடிக்கப்பட்டு வருகின்றன. இன்று காலை யோகிபாபுவின் உதவியாளர் சதாம்உசேனுக்கும் 35, கார் டிரைவர் ராமச்சந்திரனுக்கும் 31 அடிதடி நடந்தது.

படப்பிடிப்பு தளத்தில் நடந்த இந்த அடிதடியில் சதாம்உசேன் பலத்த காயமடைந்தார். போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News