கர்னல் பென்னிகுக் பிறந்தநாள் மாரத்தான், சைக்கிள் போட்டி
கூடலுார் மக்கள் மன்றம் சார்பில் பெரியாறு அணை கட்டிய கர்னல் பென்னிகுக் பிறந்தநாள் மினிமராத்தான், அதிவிரைவு சைக்கிள் போட்டி நடைபெற்றது
தேனி மாவட்டம் கூடலுாரில் செயல்பட்டு வரும் மக்கள் மன்றம் மக்களுககான பல்வேறு நலப்பணிகளை செய்து வருகிறது. பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறது. திறமையாளர்களை கண்டறிதல், அவர்களை வளர்த்து விடுதல், திறமைகளை போற்றுதல், வறியவர்களுக்கு உதவுகள், அப்பாவிகளுக்கு அரசு திட்டங்களை பெற்றுத்தருதல் என இந்த மக்கள் மன்றம் பல ஆண்டுகளாக பல்வேறு பணிகளை செய்து, மக்களின் அன்பை பெற்றுள்ளது.
இந்த மக்கள் மன்றம் சார்பில் பெரியாறு அணை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுக் சார்பில் பிறந்தநாள் விழா மினி மரத்தான், அதிவிரைவு சைக்கிள் பந்தயம் மற்றும் விருதுகள் வழங்கும் விழா நடந்தது.
மக்கள் மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். கூடலுார் காவல் ஆய்வாளர்பிச்சை பாண்டியன் முன்னிலை வகித்தார். மக்கள் மன்ற செயலாளர் கஜேந்திரன் வரவேற்றார். கௌரவத் தலைவர் தங்கராஜ் சிறப்பு விருந்தினர்களை கௌரவித்தார். ஒருங்கிணைப்பாளர் புதுராஜா பணிகளை ஒருங்கிணைத்தார். தேனி கிழக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க., மகளிர் அணி இணைச் செயலாளர் பா.லோகநாயகி கிரிதரன் பிரண்ட்ஸ் கேபிள்ஸ் நிறுவனர் பாண்டியராஜன் நினைவாக அனைவருக்கும் டிசர்ட்களை வழங்கினார். விரைவு சைக்கிள் போட்டியில் முதல்பரிசு பெற்றவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கினார்.
உத்தமபாளையம் ஏ.எஸ்.பி., மதுக்குமாரி ஐ.பி.எஸ்., போட்டிகளை துவக்கி வைத்தார். மினிமாரத்தான் போட்டியில் 307 பேர் பங்கேற்றனர். கூடலுார் வடக்கு காவல் நிலையம் முன்பு தொடங்கிய மரத்தான், 8 கி.மீ., துாரத்தை கடந்து கர்னல் பென்னிகுக் மணிமண்டபத்தில் நிறைவு பெற்றது.
தொடர்ந்து இதே வழித்தடத்தில் விரைவு சைக்கிள் போட்டி நடந்தது. என்.எஸ்.கே.பி., பள்ளி ஆசிரியர் கருத்தப்பாண்டி, மக்கள் மன்றத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள் ராஜாராம், கொடியரசன், திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கார்த்திக்பாண்டியன் நடுவர்களாக பணியாற்றினர். வெற்றி பெற்றவர்களுக்கு டாக்டர் பொன்னரசன் பரிசுகள் வழங்கினார்.