வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை: அரசு இ-சேவை மையங்களில் இனி இலவசம்
தேனி மாவட்டத்தில் அனைத்து இ-சேவை மையங்களிலும் வாக்காளர் அடையாள அட்டை இனி இலவசமாக பெறலாம் என கலெக்டர் முரளீதரன் அறிவிப்பு
வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வைத்திருப்பவர்கள், தங்களுக்கு மற்றொரு பிரதி தேவை என்றாலோ, அல்லது பழைய அட்டையை தொலைத்து விட்டாலோ புது அட்டையினை மாவட்டத்தில் உள்ள அத்தனை இ-சேவை மையங்களிலும் இனி இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தேனி கலெக்டர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.