மூடிக்கிடக்கும் துணை சுகாதார நிலையம்: இரண்டு கிராம மக்கள் அவதி

எருமலைநாயக்கன்பட்டி கிராமத்தில் துணை சுகாதார நிலையம் மூடிக்கிடப்பதால், இரண்டு கிராம மக்கள் சிகிச்சை வசதியின்றி சிரமப்படுகின்றனர்.

Update: 2021-09-07 12:45 GMT

தேனி மாவட்டம் எருமலைநாயக்கன்பட்டியில் மூடிக்கிடக்கும் துணை சுகாதார நிலையம்.

பெரியகுளம் ஒன்றியம், எருமலைநாயக்கன்பட்டியில் உள்ள துணை சுகாதார நிலையம் மூடிக்கிடப்பதால் இரண்டு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை வசதி கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.

பெரியகுளம் ஒன்றியம் எருமலைநாயக்கன்பட்டியில் உள்ள துணை சுகாதார நிலையத்தில் எருமலைநாயக்கன்பட்டி, டி.வாடிப்பட்டி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று வந்தனர். குறிப்பாக இந்த இரு கிராமங்களில் உள்ள கர்ப்பிணிகளின் பராமரிப்பு, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுதல், மருந்து மாத்திரைகள் வழங்கல் உட்பட அனைத்து பணிகளும் இதன் மூலம் தான் நடந்து வந்தது.

பல நாட்களாக இந்த சுகாதார நிலையம் மூடப்பட்டு கிடப்பதோடு, இடிந்து சேதமடைந்தும் காணப்படுகிறது. இங்கு வரும் பொதுமக்கள் உட்காரக்கூட இடம் இல்லை. செவிலியர் அவ்வப்போது கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு சென்று தனது பணிகளை கவனித்து வருகிறார்.

இந்த சுகாதார நிலையத்தை முறையாக பராமரித்து கொடுத்தால் மட்டுமே இதனை திறந்து வைத்து செவிலியர் பணியாற்ற முடியும். எனவே இதற்குரிய நடவடிக்கைகளை மாவட்ட சுகாதாரத்துறை விரைந்து எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News