ஓய்வு பெற்ற வட்டார கல்வி அலுவலருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

தேனியில் ஓய்வு பெற்ற வட்டாரக்கல்வி அலுவலர் சி.இளங்கோவனுக்கு தேனியில் பணிநிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.;

Update: 2022-06-20 12:09 GMT
ஓய்வு பெற்ற வட்டார கல்வி அலுவலருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
முப்பத்தி ஏழு ஆண்டுகள் அரசு பணியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சி.இளங்கோவனுக்கு (அருகில் அவரது மனைவி வனிதா) ஆகியோருக்கு தேனியில் பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.
  • whatsapp icon

தேனி மாவட்டம், தேவாரத்தை சேர்ந்தவர் சி.இளங்கோவன் எம்.ஏ., எம்.எட்.,. இவர் 1985ம் ஆண்டு தேனி ஒன்றியம் வீரச்சின்னம்மாள்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக சேர்ந்தார். (இவரது மனைவி வனிதாவும் பள்ளி ஆசிரியை தான்).

மொத்தம் அரசு பணியில் 37 ஆண்டுகளாக பணிபுரிந்த இவர், 1999ல் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார். 2006ல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார். 2009ல் உதவி தொடக்கக்கல்வி அலுவலராக நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் பணியில் சேர்ந்தார். 2016ல் மடத்துக்குளம் உதவி தொடக்க கல்வி அலுவலராக பணியில் சேர்ந்தார். 2015ல் தேனி வட்டாரக்கல்வி அலுவலராக பணிபுரிந்தார். 1985ம் ஆண்டு முதல் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியில் சேர்ந்தார்.

மாவட்ட தலைவராகவும், மாவட்ட செயலாளராக பணிபுரிந்தார். இவர் கடந்த மாதம் பணி ஓய்வு பெற்றார். அவருக்கு தேனியில் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆசிரியர்கள், ஆசிரியைகள், உறவினர்கள், சங்க நிர்வாகிகள், அரசு ஊழியர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள், கல்வித்துறை அமைச்சுப்பணியாகளர்கள் உட்பட பல ஆயிரம் பேர் பங்கேற்றனர். பணி ஓய்வு பெற்ற இளங்கோவனையும், அவரது மனைவி வனிதாவையும் வாழ்த்தியும், பாராட்டியும் பேசினர்.

Tags:    

Similar News