கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே சினிமாவுக்கு அனுமதி:நகராட்சி அதிரடி

கேரளாவில் பரவல் குறையாமல் இருப்பதால், கூடலுாரில் பரவி விடக்கூடாது என்பதற்காக இந்த தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Update: 2021-11-27 09:45 GMT
கூடலுார் சினிமா தியேட்டர்கள் முன் நகராட்சி நிர்வாகம் வைத்துள்ள பிளக்ஸ்.

கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் அதற்கான சான்றுகளை காட்டினால் மட்டுமே சினிமா தியேட்டருக்குள் அனுமதிக்க வேண்டும் என நகாட்சி நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இது குறித்து கூடலுார் நகராட்சி நிர்வாகம் தியேட்டர்கள் முன்பாக பிளக்ஸ்களை வைத்துள்ளது. இதில் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே தியேட்டருக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அதற்கான சான்று அல்லது மொபைல் மெசேஜ் காட்டினால் மட்டுமே உள்ளே செல்ல முடியும். தியேட்டருக்குள் கட்டாயம் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். கைகளை சுத்தம் செய்யும் சானிடைசரை தியேட்டர் நிர்வாகம் தயாராக வைத்து, சுத்தம் செய்தவர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளது.

நகராட்சியின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தேனி மாவட்டத்தில் கேரளாவுடன் மிகவும் நெருக்கமான தொடர்பு வைத்துள்ள நகராட்சி கூடலுார் மட்டுமே. இங்குள்ள மக்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் தினமும் அல்லது அடிக்கடி கேரளா சென்று வருகின்றனர். கூடலுார் நகராட்சியின் கடைசி வார்டும், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், குமுளி பஞ்சாயத்திற்குள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி நெருக்கமான தொடர்பு உள்ள நிலையில், கேரளாவில் பரவல் குறையாமல் இருப்பதால், கூடலுாரில் பரவி விடக்கூடாது என்பதற்காக இந்த தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News