மண் அரிப்பு- சின்னமனுார் நகராட்சி மேல்நிலைப்பள்ளி குழந்தைகள் அவதி

சின்னமனுார் நகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள், தரமற்ற சூழ்நிலை காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர்.

Update: 2021-12-14 03:30 GMT

தொடர் மழையால் விஸ்வன்குளத்தில் நகராட்சி மேல்நிலைப்பள்ளி  வளாகத்தில் பெரும் அளவில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. 

சின்னமனுார் விஸ்வன்குளத்தில் நகராட்சி மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தொடர் மழையால் இப்பள்ளி வளாகத்தில் பெரும் அளவில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களும் தரமற்ற முறையில் உள்ளன. பள்ளிக்குள் பல இடங்களில் மழைநீர் ஒழுகுகிறது. பள்ளியின் அருகிலேயே பி.டி.ஆர்., கால்வாய் இருப்பதால் பள்ளி வளாகத்திற்குள் பாம்புகள், இதர விஷ பூச்சிகள் நுழைந்து விடுகின்றன. பள்ளி வளாகத்தையும், கட்டடங்களையும் சீரமைத்து, சுற்றுச்சுவர் கட்டி, பாதுகாப்பான வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News