சின்னமனுாரில் சூறைக்காற்று: பல கோடி ரூபாய் வாழை சேதம்
சின்னமனுாரில் வீசிய சூறைக்காற்றில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வாழை மரங்கள் சேதமடைந்தன.;
தேனி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பலத்த சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பெரியகுளம், ஜெயமங்கலம், சில்வார்பட்டி பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதமடைந்தன. மா மரங்களி்ல் பூக்கள் உதிர்ந்தன. சில இடங்களில் நெல் வயல்கள் கூட சேதமடைந்தன.
இந்நிலையில் நேற்று சின்னமனுார், எரசக்கநாயக்கனுார் வீசிய சூறைக்காற்றில் பகுதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைமரங்கள் சாயந்தன. பயிர்களின் சேத விவரம் குறித்து வருவாய்த்துறையினரும், விவசாய, மற்றும் தோட்டக்கலைத்துறையினரும் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். ஆனால் சேத மதிப்பு பல கோடியை தாண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.