சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக சின்னமனுார் புறவழிச்சாலை இன்று திறப்பு

இந்த சாலையின் குறுக்கே உயர்அழுத்த மின்கம்பிகள் செல்வதால் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது;

Update: 2021-12-08 03:00 GMT

சபரிமலை பக்தர்களுக்காக இன்று காலை முதல் திறக்கப்பட்டுள்ள சின்னமனுார் புறவழிச்சாலை.

சபரிமலை பக்தர்கள் இடையூறின்றி செல்வதற்காக சின்னமனுார் புறவழிச்சாலை இன்று  திறக்கப்பட்டது.

திண்டுக்கல்- லோயர்கேம்ப் நான்கு வழிச்சாலை பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. தற்போது வத்தலக்குண்டில் இருந்து பெரியகுளம் வரை புறவழிச்சாலையில் இடையூறின்றி பயணிக்க முடியும். பெரியகுளம் முதல் லோயர்கேம்ப் வரை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சின்னமனுார்- உத்தமபாளையம் இடையே நுாறு சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன. மற்ற புறவழிச்சாலைகளில்  சில பணிகள் மட்டுமே நிலுவையில்  உள்ளன.

இந்நிலையில், சபரிமலை பக்தர்கள் அதிகம் வருவதால், சின்னமனுார் நகராட்சிக்குள் கடந்து செல்வது மிகவும் சிரமமாக உள்ளது. நகருக்குள் கடும்  போக்குவரத்து நெருக்கடி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று காலை  சபரிமலை பக்தர்களுக்காக சின்னமனுார்- உத்தமபாளையம் இடையே புறவழிச்சாலை திறக்கப்பட்டுள்ளது.

இந்த சாலையின் குறுக்கே உயர்அழுத்த மின்கம்பிகள் செல்வதால், கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. டூ வீலர், கார் உள்ளிட்ட இதர வாகனங்களும், சிறிய அளவிலான சரக்கு வாகனங்களும் செல்லாம். அதாவது இரண்டு மீட்டர் உயரம் வரை உள்ள வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ற வகையில் சின்னமனுார் புறவழிச்சாலை நுழைவு வாயிலில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News