ஆண்டிபட்டி அருகே டூ வீலரில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு
Tamil Crime News Today - ஆண்டிபட்டி அருகே டூ வீலரில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு;
Tamil Crime News Today - ஆண்டிபட்டி அருகே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பெண்ணிடம் ஒரு கும்பல் செயினை பறித்துச் சென்றனர். இந்நிலையில் இரண்டே நாளில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்தை சேர்ந்த கர்ணன் ( 29 ) என்பவர் தனது மனைவி கோகிலா(25,) மற்றும் தனது குழந்தையுடன் டூ வீலரில் குன்னுார் சென்றார். பின்னர் டூ வீலரில் ஊருக்கு திரும்பினார். இவர்கள் வைகை அணை கரட்டுப்பட்டி பிரிவில் சென்ற போது, மர்ம நபர்கள் கோகிலா கழுத்தில் அணிருந்த 5 பவுன் தங்க செயினை பறித்துச் சென்றனர். க.விலக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2