மண் கடத்தல் லாரியை பிடித்து கொடுத்தும் விடுவித்த அதிகாரிகளால் அதிருப்தி
அனுமதியின்றி மண் ஏற்றிச் சென்ற லாரியை பிடித்துக் கொடுத்தும் அதிகாரிகள் விடுவித்த அதிகாரிகளால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.;
தேனி மாவட்டம் கூடலுாரில் ரோடு அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த பணிக்காக ரோட்டில் உள்ள மண் அள்ளப்படுகிறது. இந்த மண்ணை அள்ளி கம்பத்தில் உள்ள ஒரு செங்கல் காளவாசலுக்கு கொண்டு செல்கின்றனர். அனுமதியின்றி இப்படி மண் ஏற்றிச் சென்ற லாரியை பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் வழிமறித்தனர். கூடலுார் எல்லையிலேயே லாரியை பிடித்து நிறுத்தி, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அங்கு வந்து பார்த்த வருவாய்த்துறை அதிகாரிகள், லாரி அனுமதியின்றி மண் ஏற்றிச் சென்றதை உறுதிப்படுத்திய பின்னரும் விடுவித்தனர். இதனால் பொதுமக்களும், அரசியல் பிரமுகர்களும் பெரும் அதிருப்தி அடைந்தனர். இது குறித்து கலெக்டர் விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.